பின்பற்றுபவர்கள்

புதன், 15 அக்டோபர், 2014

கே.வி.மகாதேவன் இசையில் பி.சுசீலா பாடிய பாடல்கள் - 4

Part -1) (Part-2 ) (Part-3) ( Part-5) (Part-6) (Part -7)

( 1966 , 1967, 1968, 1969 ஆகிய வருடங்களில் பாடிய பாடல்கள் )
                                                 
      
        இந்த குறிப்பிட்ட கால கட்டத்தில் எல்லா பெரிய நடிகர்களின் படங்களுக்கும் கே.வி.எம் இசை அமைத்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி. என்.டி.ஆர், ஏ.என்.ஆர் என தமிழ் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்களின் படங்களிலும் இசை அமைத்தார். பாரம்பரிய இசையாகட்டும், கிராமிய இசை ஆகட்டும், மெல்லிசை ஆகட்டும் அதை கையாளும் திறன் அவருக்கு இருந்தது. சுருங்க சொன்னால், கே.வி.எம்மின் இசை பற்றி “சொல்ல சொல்ல இனிக்குதடா”..
                       1966-ல் அண்ணாவின் ஆசை, சின்னஞ்சிறு உலகம், மஹாகவி காளிதாஸ், சரஸ்வதி சபதம், செல்வம், தாலி பாக்யம், தனிப்பிறவி, தேடி வந்த திருமகள் போன்ற தமிழ் படங்களிலும், ஆஸ்திபருலு, டாக்டர் ஆனந்த், பெள்ளி பந்திரி போன்ற தெலுங்கு படங்களிலும் பாடினார்.
         இக்காலகட்டத்தில் சமூக படங்களும், பக்திப்படங்களும் சமமாக வெற்றி பெற்றன. எவ்வகை பாடலாக இருந்தாலும் அதற்கு பொருந்தும் குரல் அமைப்பும், அதை கையாளும் திறனும் இருந்ததால் பி.சுசீலாவின் திறமை எல்லா வகையிலும் மிளிர்ந்தது.
       மஹாகவி காளிதாஸ் படத்தில் இடம் பெற்ற “மலரும் வான் நிலவும்” பாடலில் பி.சுசீலாவின் குரல் தண்ணிலவு போல் குளிர்ச்சியாக இருக்கும். இதை வேறு யாராலும் இப்படி பாடி இருக்கவே முடியாது. “கலைமகள் எனக்கொரு ஆணை இட்டாள்” என டி.எம்.எஸ் உடன் பாடிய பாடலும் குறிப்பிட படத்தக்கது. ஆண்மை பொங்கும் டி.எம்.எஸ்ஸின் குரலும், பெண்மை மிளிரும் பி.சுசீலாவின் குரலும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வகையில் தரமாக ஒலிக்கிறது. இதைத்தவிர “சாகுந்தலம்” நாடகம் இசை வடிவில் நாட்டியப் பாடலாக ஒலித்தது.
    சரஸ்வதி சபதம் படத்தின் பாடல்கள் எல்லாமே முத்துக்கள். “கோமாதா எங்கள்  குலமாதா பாடல் தமிழ் பட உலகில் ஒரு சாகாவரம் பெற்ற பாடல்.  ( வர்ணனை ) . இந்த தலைமுறை குழந்தைகளும்கூட ரசித்து பாடும் பாடல் என்பதை ரியாலிட்டி ஷோ-க்கள் மூலமாக பார்க்க முடிகிறது. சுசீலாவின் குரலும், சாவித்திரியின் முகபாவமும், கண்கவர் காட்சி அமைப்புகளும் எல்லோரையுமே ரசிக்க வைக்கும் விதத்தில் அமைந்தது. “தாய் தந்த பிச்சையிலே” என பிச்சைக்காரி பாடுவது போல் ஒரு பாடலை இசை அமைத்து அதை வெற்றி பெறவும் வைத்த கே.வி.எம் அவர்களும், பாடி வெற்றி பெற செய்த சுசீலாம்மாவும் பாராட்டுக்குரியவர்கள். “உருவத்தைக்காட்டிடும் கண்ணாடி” என அழகு கொஞ்சும் ஒரு பாடல் இனிமையோ இனிமை.. (வர்ணனை ). இவை தவிர  “ஹரி ஓம் நமோ” என ஒலிக்கும் திவ்யபிரபந்தம் சுசீலாவின் குரலாலும் உச்சரிப்பாலும் அழகு பெற்றது. இவ்விடத்தில் ஒன்றை குறிப்பிட வேண்டும். தமிழுக்கு தேவையான  தெளிவு, அழுத்தம் திருத்தம் போன்ற தனித்துவங்கள் பி.சுசீலாவின் குரலில் இருந்ததால் தான் என்னாவோ பல இலக்கியம் சார்ந்த பாடல்களை பாடும் வாய்ப்பு பி.சுசீலாவுக்கு கிடைத்திருக்கிறது. 2000- ஆண்டுகளுக்கு முந்தைய சிலப்பதிகாரம் முதல் தேவாரம், திருவாசம், திருப்பாவை போன்ற பல பழந்தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்ற பாடல்களையும் பாடி இருக்கிறார் பி.சுசீலா. ( ஆதாரம் )..
         செல்வம் படத்தில் “என்னடி இத்தனை வேகம்” என ஒரு பாடல் இருக்கிறது. நீண்ட நாட்களுக்குப்பின் காதலனை காண காத்திருக்கும் ஒரு பெண்ணின் ஆவல், சந்தோஷம், துள்ளல் என பாடல் முழுதும் பி.சுசீலாவின் குரல் துள்ளி விளையாடும். “ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல” என்ற சிச்சுவேஷன் பாடல், பாடகர்களின் திறமைக்கு அளிக்கப்பட்ட சேலஞ்ச். விரஹத்தின் விளிம்பில் நிற்கும் அவனின் உணர்வும், ஜாதகத்தை நம்பி, அவனை மறுக்கவும் முடியாமல் இணையவும் முடியாமல் தவிக்கும் அவளின் உணர்வும் பாடலாக மாறிய போது டி.எம்.எஸ்-சும் பி.சுசீலாவும் அதற்கு உயிர் கொடுத்தார்கள். அருமையான பாடல்.
    தாலி பாக்கியம் படத்தில் “கண் பட்டது கொஞ்சம்”, “அன்னை இல்லாமல் பிறந்தவர் யார்”, “இப்படியே இருந்து விட்டால், “உள்ளம் ஒரு கோயில்” போல ஜாலியான ஜோடிப்பாடல்கள் இடம் பெற்றன. தனிப்பிறவி படத்தில் “கன்னத்தில் என்னடி காயம்”, “சிரிப்பென்ன சிரிப்பென்ன சின்னம்மா”, “ஒரே முறை தான் உன்னோடு பேசி பார்த்தேன்”, “நேரம் நல்ல நேரம்” என எல்லாமே இளமை குலுங்கும் காதல் பாடல்களாய் அமைந்தன. தாயே உனக்காக படத்தில் இடம் பெற்ற “அமைதிப்புறாவே அமைதிப்புறாவே அழைக்கின்றேன் உன்னை” பாடல் போதிய வெற்றி பெற்றதா என தெரியவில்லை. சமாதானத்தை விரும்பும் ஒவ்வொரு பேரும் கேட்க வேண்டிய இனிமையான பாடல். தேடி வந்த திருமகள் படத்தில் “சின்ன சின்ன இதழ் விரிக்கும்” பாடலை குறிப்பிட்டு சொல்லலாம். அண்ணாவின் ஆசை படத்தில் “கோவிலிலே வீடு கட்டி”, “பூப்போல் மலர போட்டு வைத்தான்”, பாட்டெழுதட்டும் பருவம்” “இன்பம் என்பது என்ன” போன்ற பாடல்கள் மக்கள் மனதில் இடம் பிடித்தன. சின்னஞ்சிறு உலகம் படத்தில் “உள்ளம் என்பது உலகம் ஆகலாம்” குறிப்பிடத்தக்க பாடல்.
   இதே வருடம் தெலுங்கில் “Aasthiparulu” படத்தில் “Soggade china naayana ,   Erra Errani buggaladaana ponravai பிரபலமான பாடல்கள். டாக்டர் ஆனந்த் படத்தில் peruguthunnathi, , Neelala kannullo போல் ஹிட் பாடல்கள் அமைந்தன. அனால் கிரீடம் போல அமைந்தது “Neela Mohana Rama பாடல் தான். மிக அருமையான பாடல். மொத்ததில் 1966-ஆம் வருடம் கே.வி.எம், பி.சுசீலா கூட்டணிக்கு வெற்றிகரமான வருடமாக அமைந்தது என்றே சொல்லலாம்.



          Komatha engal kulamatha

                        Uruvathai kaattidum kannadi


                Ontra iranda eduthu solla 

              (kann pattathu konjam)


          (Ore murai thaan unnodu pesi)
(amaithi purave )

                 (soggade chinna nayana)


         (neela mohana rama )


    thaai thantha pichayile 

              (Neelala kannullo )


   

     1967-ல் அரச கட்டளை. கந்தன் கருணை, திருவருட்செல்வர், விவசாயி. தாய்க்கு தலைமகன், முகூர்த்த நாள், பாலாடை, கண்கண்ட தெய்வம், பெண்ணே நீ வாழ்க, பேசும் தெய்வம், பொன்னான வாழ்வு, ராஜாத்தி, சீதா, தங்க தம்பி, தங்க வளையல்  போல நிறைய தமிழ் படங்களுக்கு இசை அமைத்தார் கே.வி.எம். அதைப்போல் தெலுங்கிலும் “Baalaraju katha”, Kachu kota”, “Private master”, “polla rangadu”, “Upayanlu apayam”, “Prana mithrulu”, “sabash Ranga”, “Sakshi”, “Saraswathi sapatham”, “Shiva leelalu”, “thanamey prapancha leela” என பல தெலுங்குப் படங்களுக்கும் இசை அமைத்தார் கே.வி.எம். 1967-லேயே 25 படங்களுக்கு இசை அமைப்பது என்பது பெரிய விஷயம் தான். அதுவும் எப்படிப்பட்ட கம்போசிஷன்ஸ்! பிரமிக்க வைக்கும் இசை என்றே சொல்லலாம்.
      அரசகட்டளை படத்தில் இரண்டு டாப் ஹீரோயின்ஸ். ஜெயலலிதா, சரோஜாதேவி என இருவருக்குமே பி.சுசீலா தான் பின்னணி பாடினார். “புத்தம் புதிய புத்தகமே”, “முகத்தை பார்த்ததில்லை”, “வேட்டையாடு விளையாடு”,என்னை பாட வைத்தவன் ஒருவன்” போல ஒன்றை ஒன்று மிஞ்சும் காதல் பாடல்களும், “பண்பாடும் பறவையே என்ன தூக்கம்” போன்ற எழுச்சி மிக்க ஒரு பாடலும், “எத்தனை காலம் கனவுகள் கண்டேன்” போன்ற நடனப்பாடலும் பெரிய வெற்றியை ஈட்டின. அரச கட்டளையில் இரண்டு கதாநாயகிகளுக்கும் பாடிய பி.சுசீலா, கந்தன் கருணையில் சாவித்திரி, கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா என மூன்று டாப் ஹீரோயினிகளுக்கும் பாடினார். சாவித்ரிக்காக “சொல்ல சொல்ல இனிக்குதடா” என தேன் சொட்டும் பக்திப்பாடலையும், ஆறுமுகனே ஷண்முகா என ஒரு விருத்தத்தையும் பாடினார். கே.ஆர்.விஜயாவுக்காக “மனம் படைத்தேன் உன்னை நினைப்பததற்கு” என்ற மனதை கொள்ளும் கொள்ளும் காதல் பாடலை பாடினார் பி.சுசீலா. ஜெயலலிதாவுக்காக “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா”, “வெள்ளி மலை பொதிகை மலை எங்கள் மலை அம்மே” “குறிஞ்சியிலே பூ மலர்ந்து” என மூன்று பாடல்களை பாடினார் பி.சுசீலா. தாயின் குரலாக சாவித்ரிக்கும், அரச குல கன்னியின் காதல் குரலாய் கே.ஆர்.விஜயாவுக்கும், குறத்தியின் குரலாய் ஜெயலலிதாவுக்கும் பின்னணி  .குரலாய் ஒலித்தது பி.சுசீலாவின் குரலே. எல்லா பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்ஸ்.
          திருவருட்செல்வர் படத்தில் “ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே” என்ற பக்திப்பாடல் மனதை கொள்ளை கொள்ளும் பாடல். ஆனால் “மன்னவன் வந்தானடி தோழி” பி.சுசீலாவின் திரை இசை வாழ்க்கையில் ஒரு மைல்கல். ( Write-up ) .கிளாசிக்கல் பாடல்களை கையாளுவது பி.சுசீலாவுக்கு கஷ்டமான விஷயம் ஒன்றும் இல்லை. Pralaya payodhi jale”, “ariya paruvamada”, “ennai pol pennallavo,தேவி விஜயபவானி”, “நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்”, “கொஞ்சும் சலங்கை ஒலி கேட்டு” “எங்கோ பிறந்தவராம்” "nadireyi gadinchene" போல் பல பாடல்களை ஆரம்ப காலத்திலேயே பாடி இருக்கிறார். ஆனால், இந்த பாடலை பாடும் போது பி.சுசீலாவிடம் நிறைய அனுபவம் கூடி இருந்தது. பாடிப்பாடி குரலில் உரம் ஏறி இருந்தது. அதை முழுமையாய் உபயோகித்து கல்யாணி ராகத்தை பிழிந்தெடுத்து கே.வி.எம் கொடுத்த அதி அற்புதமான பாடல் தான் “மன்னவன் வந்தானடி”. இசை விமர்சகர் சுப்புடு இப்பாடலை பற்றி எழுதும் போது “பி.சுசீலாவைப்போல் இப்பாடலை பாட வட இந்தியாவில் ஒரு பாடகியாவது இருக்கிறாரா?” என கேள்வியே கேட்டிருந்தார். எம்.எல்.வி போன்ற கர்நாடக மேதைகளும் கூட  இப்பாடலை பாராட்டி இருந்தார்கள்.
        முகூர்த்த நாள் படத்தில் “மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு”, பாலாடை படத்தில் “பட்டாடை தொட்டில் கட்ட வேண்டும்”, “அப்படி என்ன பார்வை அங்கும் இங்கும்”, “என் கண்ணுக்கு விருந்தெங்கே”, “பேசும் தெய்வம்” படத்தில் “இதய ஊஞ்சல் ஆடவா”, “அழகு தெய்வம் மெல்ல மெல்ல”. “பத்து மாதம் சுமக்கவில்லை”, “பொன்னான வாழ்வு”  படத்தில் “வாழி நலம் சூழ”, சீதா படத்தில் “காவியத்தின் தலைவன் ராமனடி”, “நலம் காக்கும் குல தெய்வமே” தங்க தம்பி படத்தில் “ஆளுக்கொரு முத்தம் இந்த அம்மா கன்னத்தில்” பெண்ணே நீ வாழ்க படத்தில் “உயிர் நீ உனக்கொரு உடன் நான்” போன்ற பல சிறப்பான பாடல்களை இவ்வருடத்தில் கே.வி.எம் இசையில்  பி.சுசீலா பாடினார். 
       தெலுங்கு படங்களை பொறுத்த வரை இவ்வருடம் கே.வி.எம்முக்கு மிகவும் ஏற்றமான ஒரு வருடமாக இருந்தது. “kanchu kota” படம் பெரிய ஹிட். ee puttina roju”, “siggenduku cheli”, “ledu ledani” and “sari leri neekkavvaru போன்ற பாடல்கள் பிரபலம் ஆனவை. Private master படத்தில் adhamlo kanipichedi”, “chiru chiru jallula”, “theravaku theravku”. “ekkadakellave pilla” என எல்லாமே ஹிட் பாடல்கள். Prana mitrulu படத்தில் Gunde jallu mannadi”, ”, “manasu mamatha”  போன்ற பாடல்கள் ஹிட் ஆனவை. Upayamlo apayam” படத்தில் chinnari ponnari”, “nisha enthuku”, “padaru gadichi” “o baala raja” , Sakshi படத்தில்  “amma kadupu challaga  போல நல்ல பாடல்கள் இடம் பெற்றன.





        Putham puthiya puthagame
                        pann paadum paravaiye

                Solla solla inikkuthada
          Manam Padaithen unnai




         Annai entru aagum munne
Thirupparankunrathil nee

               kadhal entham meedhil



                 Sarileru neekkevvaru

   Gunde jhallu mannadi

             Amma kadupu challaga
     
            1968-ல் தில்லானா மோகனம்பாள், திருமால் பெருமை, தேர் திருவிழா, அன்னை சொன்ன சொல், பேசும் தெய்வம், பணமா பாசமா, முகராசி, காதல் வாகனம், ஜீவனாம்சம், டெல்லி மாப்பிள்ளை, அன்று கண்ட முகம் போன்ற தமிழ் படங்களும் “adrushtavanthulu”, “bangaru picchikஎ”. “lakshmi nivasam”, “niluvu dopidi”, “thalli prema”., “undamma bottu pedatha” போன்ற தெலுங்குப் படங்களும் வெளி வந்தன.
     தில்லானா மோகனாம்பாள் படத்தில் “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன”, “நலந்தானா, நலந்தானா” என இரண்டு பாடல்களை பாடினார் பி.சுசீலா. ஷண்முகப்ரியா ராகத்தில் ஸ்ருங்கார ரசம்  சொட்டும் நடன பாடலான “மறைந்திருந்து பார்க்கும்” எப்படி.  மறக்க முடியும்!?. படத்தின் வெற்றிக்கு இவ்விரு உறுதுணையாக நின்றன. “நலந்தானா நலந்தானா” இன்னொரு மைல்கல். நாதஸ்வர இசையின் ஓசைக்கு தன்னாலும் ஈடு கொடுக்க முடியும் என பி.சுசீலா நிரூபித்த பாடல். படத்தின் உயிர் நாடியான பாடலும் கூட. அதுவரை பெரும்பாலான கிளாசிகல் நடனப்பாடல்களை எம்.எல்.வி, பி.லீலா போன்ற கர்நாடக இசை மேதைகளே பாடி வந்தார்கள். ஆனால் இப்பாடல் அவ்வகை பாடல்களுக்கு பி.சுசீலாவின் குரலும் உகந்ததே என நிருபித்தது. வெறும் ஸ்ருங்கார நடன பாடலாக இல்லாமல், நடனத்துடன் ஒரு பெண்ணின் காதலை, வலியை, இயலாமையை, துடிப்பை உணர்த்தும் பாடலாக அமைந்தது.. அத்தனை உணர்வுகளையும் குரலில் கொண்டு வந்தார் பி.சுசீலா. என்ன இல்லை இந்த பாடலில் ! இனிமையான குரல், தெளிவான வார்த்தைகள், சுத்தமான ஸ்ருதி, ஒவ்வொரு வார்த்தையிலும் இருக்கும் எக்ஸ்ப்ரஷன்ஸ் ( Eg. இந்த பெண் பட்ட பாட்டை யார் அறிவார்? ) என எல்லாமே இருக்கும். ஒரு கம்பீரமான, சுமரியாதை உள்ள, அதே சமயம் பெண்மையின் நலம் கெடாத நடன மணியாய்  பத்மினி திரையில் வாழ்ந்து காட்டினார். அந்த கேரக்டரின் தன்மையை உள்வாங்கி, அதை தன் குரலில் கொண்டு வந்தார் பி.சுசீலா. இப்பாடலில் சரோஜாதேவி நடித்திருந்தால் அதற்கேற்றார் போல் பாடி இருப்பார் இசை அரசி என்றே நினைக்கிறேன். ஏன், ஒருவர் கூட இப்பாடலை ரியாலிட்டி ஷோ-க்களில் பாடுவதில்லை !!? இப்படம் “raga gaalஎன தெலுங்கிலும் டப் செய்யப்பட்டது. நலந்தானா பாடலை தெலுங்கிலும் கேளுங்கள். Nee dega
       “திருமால் பெருமை”யில் திருப்பாவையில் இருந்து “மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்”, ”வாரணமாயிரம் சூழ வலம் செய்து” “ஓங்கி உலகளந்த உத்தமன் தாழ் வாழ்க” போன்ற பாடல்களை பாடினார் சுசீலா. என்னே ஒரு பக்தி மணம்! “ஹரி ஹர கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா” என டி.எம்.எஸ்-உடன் இணைந்து செவி குளிரும் இன்னொரு பக்திப்பாடல். “கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி”., “கரை ஏறி மீன் விளையாடும்” போன்ற பாடல்களையும் பாடினார் சுசீலா.
        இதற்கு நேரெதிராக “தஞ்சாவூரு சீமையிலே” என்று தேர் திருவிழா படத்தில் கிராமிய மணம் வீசும் பாடலை பாடினார். “சித்தாடை கட்டியிருக்கும் சிட்டு”, “அடிக்கட்டுமா முரசு அடிக்கட்டுமா” என மேலும் துள்ளலான பாடல்கள் அப்படத்தில் இடம் பெற்றன. “மழை முத்து முத்து பந்தலிட்டு” என இன்னொரு காதல் பாடலும் குறிப்பிட தக்கது.  இவ்வருடத்தில் இதை தவிர “முகராசி”, “காதல் வாகனம்” போன்ற எம்.ஜிஆர் படங்களுக்கும் இசை அமைத்தார் கே.வி.எம். காதல் வாகனம் படத்தில் “என்னங்க, சொல்லுங்க” , “வணக்கம் என் வணக்கம்”, “வா பொண்ணுக்கு பொட்டு வைக்க”, “நடப்பது 68”, “இங்கே வா இங்கே வா ஒரு ரஹசியம்” என எல்லாமே குதூகலமான பாடல்கள். முகராசி படத்தில் “எனக்கும் உனக்கும் தான் பொருத்தம்”, “முகத்தை காட்டி காட்டி”, “என்னென்ன என்னென்ன எண்ணங்கள்” போன்ற டூயட்டுகளும் “தண்ணீரேனும் கண்ணாடி” என்ற சோலோவும் ஹிட் ஆகின. பணமா பாசமா படத்தில் “மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ”, “மெல்ல மெல்லமெல்ல எந்த மேனி நடுங்குது மெல்ல” பாடல்கள் குறிப்பிட தக்க பாடல்கள்.
    தெலுங்கில் adrushtavanthulu படத்தில் Mokkajonna thotalo ஹிட் பாடல். தவிர Kodi koose jamu, Muddante chedha, Naa manase godari,  padina mudhra, Chinta chettu என எல்லாமே சிறப்பான பாடல்களாய் அமைந்தன. “bangaru picchikaபடத்தில் manase gani karagani”, Antunnadihi radha”, “po po nidurapo போன்ற பாடல்கள் இடம் பெற்றன. “thalli prema படத்தில் kalalo ilalo”, komma meedhi koyilammaletha letha பாடல்களும் “undamma bottu pedatha” படத்தில் “Sandhya gali theli murali”, Raavama Mahalakshmi”, “chaalule nidurapoபோன்ற பாடல்கும் குறிப்பிட படத்தக்கவை.




          Marainthirunthu paarkkum


        ( Margazhi thingal mathi niraintha )
Nalanthana  nalanthana

             (hari hara gokula ramana)


           ( thanneerenum kannadi )
          
( Thanjaavooru seemaiyle )
               (Maariyathu nenjam )


       ( Mokkajonna thottalo )


                (Ravamma mahalakshmi )

             ( Po Po nidurapo )



     1969-ல் அடிமைப்பெண், குலவிளக்கு, மனைவி, சுபதினம். துணைவன் போன்ற தமிழ் படங்களிலும் , Adarsha kutumbam. Akka chellelu, anna thammudu, bhale Rabgadu, eka veera, muhoortha phalam.  Manushulu Marali, Sivabhaktha Vijayam போன்ற தெலுங்கு படங்களிலும் கே.வி.எம் இசையில் பாடினார் பி.சுசீலா.
    அடிமைப்பெண் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பி.சுசீலாவுடன் இணைந்து எஸ்.பி.பி பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் எஸ்,பி,பிக்கும் ஒரு திருப்புமுனை பாடலாக அமைந்தது. “காலத்தை வென்றவன் நீ” பாடல் பி.சுசீலாவும், எஸ்.ஜானகியும் இணைந்து பாடிய பாடல். இப்பாடலை ஹிந்தியில் “பி.சுசீலாவும், ஆஷா போன்ஸ்லேவும்” இணைந்து பாடினர். குலவிளக்கு படத்தில் “பூ பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ”  பாடல் சந்தோசமாகவும், சோகமாகவும் சுசீலாவின் குரலில் ஒலித்தது. “பனை மரம். தென்னை மரம் வாழை மரம்” என குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லும் பாடலும் உண்டு. சுபதினம் படத்தில் “புத்தம் புது மேனி” என கர்நாடக இசை மேதை “பாலமுரளி கிருஷ்ணாவுடன்”, பி.சுசீலா பாடிய ஒரு அழகிய டுயட் இடம் பெற்றது. “வேறென்ன வேண்டும் உன்னைத்தவிர” என்ற பாடலை “ஏ’எல்.ராகவனுடன்” இணைந்து பாடினார் பி.சுசீலா அவர்கள். மனைவி படத்தில் “பெண்ணின் பெருமையே பெருமை” என்று பெண்ணின் பெருமை கூறும் பாடல் ஓரளவு பிரபலமான பாடல். இவ்வருடமும் துணைவன் என்ற  பக்திப்படம் கே.வி.எம் இசையில் வெளிவந்தது. “மருத மலை மீதிலே” என்ற அருமையான முருகன் புகழ் பாடும் பாடலை பாடினார் பி.சுசீலா அவர்கள். அதைத்தவிர “நான் யார் என்பதை நீ சொல்ல”, “”,போன்ற பாடல்களும் இடம் பெற்றன.

      தெலுங்குப்படங்களில் கே.வி.எம்மின் இசை பெரிய வெற்றியை பெற்று வந்ததால் இவ்வருடதிலும் குறிப்பிட படத்தக்க படங்கள் கிடைத்தன. ஆனால் பெரும்பாலும் படங்கள் எம்.ஜி.ஆர் படங்களில் இடம் பெரும் ஜாலியான காதல் பாடல்களை போலவே ஜாலியாக இருந்தன. Adarsha kutumbam படத்தில்  hello saaru oh dora gaaru “, Bidiyamela o cheli, kalagajjagangalamma, Cheyi cheyi  போல எல்லாமே ஹிட் பாடல்கள். Akka chellelu பட பாடல்களும் மிகவும்  பிரபலமானவை. “பாண்டவுலு பாண்டவுலு தும்மேதா” இப்போதும் கூட பிரபலம். சரியான குத்துப்பாட்டு. தவிர chekachekalade, Chita patachinnukulatho, santhosham chesukunda, Srimati yemanna srivaru என எல்லாமே ஹிட்ஸ். Anna thammudu படத்தில் “nannu choosi vennela”, navve o chilakamma,  siggesthundoi cheppa போன்றவை குறிப்பிடப்படத்தக்கவை. Bhale rangadu படத்தில் emitoidi emito”, merisipoye yennelaaye”, “Hip hip hurray oho bhale” பாடல்களும் ஹிட் பாடல்களே. Buddhimanthudu படத்தில் “Guttameedhaguvva kusindhi”, “thotaloki raaku raa” பாடல்கள் இடம் பெற்றன. இவ்வருடத்தில் இன்னொரு மியுசிகல் ஹிட் “Eka veeraபடம். கிட்டத்தட்ட 10 பாடல்கள் பி.சுசீலாவின் குரலில் இடம் பெற்றன. thottalonaa raju”, “Nee peru Talachina chalu", “avunacheliya sari” போன்றவை காலத்தால் அழியாத பாடல்கள். manushulu maaraali” படத்தில் holiday holiday”, “maapaayinavvali "toorupu sindoorapu" பாடல்களை குறிப்பிட்டு சொல்லலாம். muhoortha balam படத்தில் ammalaganna ammallara, “ugga gillagane”, “doy doy vasthunnaadoy, “kaay kaay kaavalikaai”, “matthulogammatthule”, “neeku endaa manasunhoபோன்ற பாடல்கள் குறிப்பிட பட தக்கவை. 


List of Songs (1966-1969)


Sl

Lang

Movie

Songs

Singers

1966 Tamil thanippiravi ALaip pArppadhAl azhagenna TMS, P. Susheela
1966 Tamil thaaye unakkaaga amaidhi purAve amaidhi purAve P. Susheela
1966 Tamil thaali bhagyam annai illamal piranthavar  P. Susheela
1966 Tamil thedi vandha thirumagal chinna chinna idhazh P. Susheela
1966 Tamil thanippiravi edhir paaramal nadanthadi P. Susheela
1966 Tamil selvam Ennadi ithani vegham P. Susheela
1966 Tamil saraswathi sabatham hari om namo (divya brabandham) P. Susheela
1966 Tamil annavin asai Inbam enbathu enna TMS, P. Susheela
1966 Tamil thaali bhagyam ippadiyE irundhuvittaal eppadi irukkum TMS, P. Susheela
1966 Tamil chinnanjiru ulagam P. Susheela
1966 Tamil saraswathi sabatham kalai vaazhga (komatha engal kula) P. Susheela
1966 Tamil mahakavi kaalidas kalaimagaL enakkoru aaNaiyittaaL TMS, P. Susheela
1966 Tamil thaali bhagyam kann pattadhu konjam TMS, P. Susheela
1966 Tamil thanippiravi kannathil ennadi kaayam P. Susheela, TMS
1966 Tamil thedi vandha thirumagal TMS, P. Susheela
1966 Tamil annavin asai kovilile Veedu katti TMS, P. Susheela
1966 Tamil mahakavi kaalidas malarum vaan nilavum P. Susheela
1966 Tamil chinnanjiru ulagam manasirukkanum manasu TMS, P. Susheela
1966 Tamil thanippiravi nEram nalla nEram TMS, P. Susheela
1966 Tamil thedi vandha thirumagal nizhal pOl kuzhal mudithu TMS, P. Susheela
1966 Tamil selvam ondraa iraNdaa eduthuch cholla TMS, P. Susheela
1966 Tamil thanippiravi orE muRaidhaan unnOdu pEsi TMS, P. Susheela
1966 Tamil annavin asai paatezhuthattum paruvam P.B. Srinivas, P. Susheela
1966 Tamil thanippiravi pEsip pEsiyE pozhudhum TMS, P. Susheela
1966 Tamil annavin asai poo pol malara pottu vaithan P. Susheela
1966 Tamil chinnanjiru ulagam pudhumai pengaladi bhumikku P. Susheela
1966 Tamil mahakavi kaalidas saakunthalam -part1 TMS, P. Susheela, ponnusami, soolamangalam
1966 Tamil mahakavi kaalidas saakunthalam -part2 TMS, P. Susheela
1966 Tamil thanippiravi sirippenna sirippenna P. Susheela
1966 Tamil saraswathi sabatham thai thantha pichayile  P. Susheela
1966 Tamil annavin asai Thunbam enbathu enna P. Susheela
1966 Tamil chinnanjiru ulagam ullam enbadhu ulagam aghalaam P. Susheela
1966 Tamil thaali bhagyam ullam oru koyil TMS, P. Susheela
1966 Tamil saraswathi sabatham uruvathai kaatidum kannadi P. Susheela
1966 Tamil chinnanjiru ulagam vizhuntha sUriyan  P. Susheela
1966 Telugu Pelli Pandiri Ghantasala, P. Susheela
1966 Telugu antastulu amma kadupu challaga P. Susheela
1966 Telugu aasthiparulu Andariki theliyanidhi Ghantasala, P. Susheela
1966 Telugu doctor anand Chakkani challani ellu Ghantasala, P. Susheela, Vasantha
1966 Telugu doctor anand chakkani challani ellu P. Susheela
1966 Telugu aasthiparulu Chali chali chali Ghantasala, P. Susheela
1966 Telugu Pelli Pandiri P. Susheela
1966 Telugu aasthiparulu Magavadivale Egaresukupo P. Susheela
1966 Telugu doctor anand mathilono naa swami P. Susheela
1966 Telugu doctor anand neela mohana rara P. Susheela
1966 Telugu doctor anand neelala kannulatho P. Susheela
1966 Telugu doctor anand peruguthunnathi P. Susheela
1966 Telugu aasthiparulu Soggade chinni nayana P. Susheela
1966 Telugu aasthiparulu Yerra yerani buggala Ghantasala, P. Susheela
1967 Tamil thanga thambi aalukkoru mutham P. Susheela
1967 Tamil kann kanda deivam aandavane saamiyo TMS, P. Susheela
1967 Tamil ponnana vazhvu acham piranthadhu P. Susheela
1967 Tamil thiruvarut chelvar Adhisivan thAzh paNindhu TMS, P. Susheela
1967 Tamil thaaikku thalaimagan annayentru Agum munne ArArO TMS, P. Susheela
1967 Tamil paaladai appadi enna paarvai angum  P. Susheela
1967 Tamil kandhan karunai arumugane shanmuga P. Susheela
1967 Tamil deivega uravu azhagiya thennanjOlai, amaidhi TMS, P. Susheela
1967 Tamil thanga thambi azhuvatharka piranthen P. Susheela
1967 Tamil paaladai en kannukku virundhengE TMS, P. Susheela
1967 Tamil arasa kattalai Ennai paada vaithavan P. Susheela
1967 Tamil vivasayi ennamma singara kannamma TMS, P. Susheela
1967 Tamil arasa kattalai Ethanai kaalam kanavukal kanden P. Susheela
1967 Tamil vivasayi Evaridathum thavaru illai, enakkuthan TMS, P. Susheela
1967 Tamil pesum deivam idhaya oonjal aada vaa TMS, P. Susheela, PL
1967 Tamil vivasayi Ippadithan irukka vendum pombale P. Susheela
1967 Tamil vivasayi kaadhal enthan mEthil entral TMS, P. Susheela
1967 Tamil kann kanda deivam kannukkutti kannukkutti  TMS, P. Susheela
1967 Tamil seetha kaviyathin thalaivan P. Susheela
1967 Tamil kandhan karunai kurinjiyile poo malarnthu P. Susheela
1967 Tamil mugoorththa naal maanikka mookuthi madhurai P. Susheela
1967 Tamil kandhan karunai manam padaithEn unnai P. Susheela
1967 Tamil thiruvarut chelvar mannavan vanthaanadi P. Susheela
1967 Tamil deivega uravu maram pazhuthaal P. Susheela
1967 Tamil mugoorththa naal TMS, P. Susheela
1967 Tamil raajaathi Moongilile varum P. Susheela
1967 Tamil arasa kattalai mughathai paarthathillai TMS, P. Susheela
1967 Tamil seetha naadi thudikkudhu  TMS, Seergazhi, P. Susheela
1967 Tamil mugoorththa naal Nadandhadhu netru mudindhadhu P. Susheela, L.R. Eashwari
1967 Tamil seetha nalam kaakkum kula P. Susheela, Soolamangalam
1967 Tamil raajaathi paadi paranthu varum P. Susheela
1967 Tamil thaaikku thalaimagan paarthu kondathu kanukku kannu TMS, P. Susheela
1967 Tamil mugoorththa naal paatukku paatteduppEn  TMS, P. Susheela
1967 Tamil arasa kattalai panpaadum paravaye P. Susheela
1967 Tamil paaladai pattadai thottil katta vendum P. Susheela
1967 Tamil seetha pennukku rahasiyam P. Susheela
1967 Tamil thanga thambi pozhuthellaam P. Susheela
1967 Tamil arasa kattalai Putham puyhiya puthagame TMS, P. Susheela
1967 Tamil kandhan karunai solla solla inikkuthada P. Susheela
1967 Tamil mugoorththa naal sooriyan poy chandhiran TMS, P. Susheela
1967 Tamil thanga valaiyal P. Susheela
1967 Tamil kandhan karunai Thiruparankuntrathil P. Susheela, Soolamangalam
1967 Tamil ponnana vazhvu ullathin ulle TMS, P. Susheela
1967 Tamil penne nee vaazhga uyir nee unakkoru udal naan P. Susheela
1967 Tamil thaaikku thalaimagan vaazhavendum sugham valara vendum TMS, P. Susheela
1967 Tamil ponnana vazhvu vaazhi nalam soozha P. Susheela
1967 Tamil kandhan karunai Vellimalai podhigai malai  P. Susheela
1967 Tamil thanga thambi vetkamenna thendral vanthu P. Susheela, TMS
1967 Tamil arasa kattalai vettayadu vilayadu viruppampole TMS, P. Susheela
1967 Telugu saraswathi sapadam (D) aalinchi pedalni P. Susheela
1967 Telugu Piravate Master adhamlo kanipitchedi ghantasala, P. Susheela
1967 Telugu kanchu kota  alala poola (ee puttina roju) ver2 P. Susheela
1967 Telugu poola rangadu Burrakatha Ghantasala, P. Susheela
1967 Telugu sabash ranga chaala manchikalam P. Susheela, Ghantasala
1967 Telugu thanamay prapancha leela (D) chakkani ella P. Susheela
1967 Telugu sakshi chilipoda chinnoda ghantasala, P. Susheela
1967 Telugu uppayanlu appayam chinnari ponnari P. Susheela
1967 Telugu sakshi daya lethe na meetha P.B. Srinivas, P. Susheela
1967 Telugu Shiva leelalu Deva mahadeva shambo mahadeva  P. Susheela
1967 Telugu Shiva leelalu Ealo eaalelo galla cheera kattukunna P. Susheela
1967 Telugu kanchu kota Ee puttina roju P. Susheela
1967 Telugu pirivate Master ekkadikellave pilla P. Susheela, PNR
1967 Telugu uppayanlu appayam ethi siguragulalu P. Susheela, Chorus
1967 Telugu prana mithrulu Gunde jhallu mannadi P. Susheela
1967 Telugu Sabash ranga Jilibili jilibili chinnamma singaaram P. Susheela
1967 Telugu prana mithrulu kalakala navve Ghantasala, P. Susheela
1967 Telugu thanamay prapancha leela (D) P. Susheela
1967 Telugu saraswathi sapadam (D) kalalani vilasilu P. Susheela
1967 Telugu saraswathi sapadam (D) kuvakuvalaadunu P .Susheela
1967 Telugu kanchu kota Ledhu Ledhani Ghantasala, P. Susheela
1967 Telugu prana mithrulu manasu mamatha manishiki P. Susheela
1967 Telugu Sabash ranga Ne priyamaara talachitini sukham P. Susheela
1967 Telugu uppayanlu appayam nisha enthuku P. Susheela
1967 Telugu uppayanlu appayam o baala raaja P. Susheela
1967 Telugu saraswathi sapadam (D) o maatha sakalakula maatha P. Susheela
1967 Telugu uppayanlu appayam padaru gadichi P.B. Srinivas, P. Susheela
1967 Telugu prana mithrulu pilupu vinu paluku P. Susheela
1967 Telugu uppayanlu appayam prathi pappa puttethe P. Susheela
1967 Telugu kanchu kota Sari leru neekeveru P. Susheela, S. Janaki
1967 Telugu kanchu kota Siggenduke cheli P. Susheela, S. Janaki
1967 Telugu Piravate Master siru siru jallula P. Susheela
1967 Telugu Piravate Master siru siru jallula (sad) P. Susheela
1967 Telugu Upaayamlo Apaayam P. Susheela
1967 Telugu sabash ranga sudha murali manohara P. Susheel, Ghantasala
1967 Telugu balaraju katha suklam-slogam P. Susheela
1967 Telugu Piravate Master theravaku theravaku ghantasala, P. Susheela
1967 Telugu kanchu kota Uluki uliki P. Susheela
1967 Telugu thanamay prapancha leela (D) velaveyani P. Susheela
1967 Telugu sabash ranga Ye laye chekkili gayam P. Susheela, Ghantasala
1968 Tamil ther thiruvizha adikkattuma murasu  TMS, P. Susheela
1968 Tamil annai sonna sol adikkirathu doopu P. Susheela
1968 Tamil jeevanamsam akkakkO kai kai  TMS, P. Susheela
1968 Tamil pesum deivam azhagu deivam mella TMS, P. Susheela
1968 Tamil panama paasama chinnanchiru vEdu idhu P. Susheela
1968 Tamil jeevanamsam enakkuLLE nee irukka unakkuLLE TMS, P. Susheela
1968 Tamil mugarasi enakkum unakkumdhaan  TMS, P. Susheela
1968 Tamil kaadhal vaaganam ennanga ennanga TMS, P. susheela
1968 Tamil mugarasi ennenna ennenna eNNangaL TMS, P. Susheela
1968 Tamil thirumal perumai hari hari gOkula ramaNaa undhan TMS, P. Susheela, Master Maharajan
1968 Tamil antru kanda mugam idhayam pollathathu naan P. Susheela
1968 Tamil kaadhal vaaganam Inge vaa inge vaa oru rahasyam P.B. Srinivas, P. Susheela
1968 Tamil annai sonna sol kaadhalukku nalu pakkam P. Susheela
1968 Tamil antru kanda mugam kann padaithaan unnaik TMS, P. Susheela
1968 Tamil thirumal perumai kanna kanna kaviya P. Susheela
1968 Tamil thirumal perumai Kannanukkum kalvanukkum P. Susheela
1968 Tamil thirumal perumai karaiyeri mEn vilayadum P. Susheela, Soolamangalam
1968 Tamil panama paasama maariyathu nenjam maatriyavar yaarO P. Susheela
1968 Tamil delli mapillai malai mudiyil pani azhagu P. Susheela, Jamunarani
1968 Tamil thillana moghanambal marainthirunthu paarkkum P. Susheela
1968 Tamil thirumal perumai margazhi thingal mathi P. Susheela
1968 Tamil ther thiruvizha mazhai muthu muthu TMS, P. Susheela
1968 Tamil panama paasama mella, mella mella, endhan mEni TMS, P. Susheela
1968 Tamil mugarasi mugathaik kaatti kaatti TMS, P. Susheela
1968 Tamil kaadhal vaaganam nadappadhu 68, idhu 68 P. Susheela
1968 Tamil thillana moghanambal Nalanthaana nalanthaana P. Susheela
1968 Tamil thirumaal perumai ongi ulagalantha P. Susheela
1968 Tamil delli mapillai paadaatha paadal ethu TMS, P. Susheela
1968 Tamil pesum deivam pathu maatham sumakkavillai TMS, P. Susheela
1968 Tamil delli mapillai shOkkuthaan, jaalithaan, jOruthaan P. Susheela, L.R. Eashwari
1968 Tamil ther thiruvizha sithaadai kattiyirukkum TMS, P. Susheela
1968 Tamil ther thiruvizha thanjaavooru seemayile TMS, P. Susheela
1968 Tamil mugarasi Thannerenum kannadi  P. Susheela
1968 Tamil kaadhal vaaganam vaa ponnukku pottu vaikka TMS, P. Susheela
1968 Tamil thirumal perumai vaaranamaayiram P. Susheela
1968 Tamil kaadhal vaaganam vanakkan en vanakkam P. Susheela
1968 Tamil antru kanda mugam vazhakkondru thoduppEn TMS, P. Susheela
1968 Telugu niluvu dopidi aadapillalante hoyhoy P. Susheela
1968 Telugu undamma bottu pedatha adugaduguna gudi undi P. Susheela
1968 Telugu mangalya vijayam (D)  annai illamal piranthavar in telugu P. Susheela
1968 Telugu niluvu dopidi ayyindi ayyindi anukunnadi P. Susheela
1968 Telugu undamma bottu pedatha chaalule nidurapo P. Susheela
1968 Telugu adrushtavanthulu Chinta chettu  Ghantasala, P. Susheela
1968 Telugu undamma bottu pedatha chukkaltho cheppalani S.P. Balasubrahmanyam, P. Susheela
1968 Telugu dopidi dongalu (D) eannenno eannenno P. Susheela
1968 Telugu bangaru pichuka Ee radha P. Susheela
1968 Telugu lakshmi nivasam guvvalaanti chinnadhi P. Susheela
1968 Telugu mangalya vijayam (D) ippadiyE irundhuvittaal in telugu P. Susheela, ?
1968 Telugu thalli prema kalalo ilalo P. Susheela, P. Leela
1968 Telugu mangalya vijayam (D)  kann pattadhu konjam in telugu P. Susheela, ?
1968 Telugu adrushtavanthulu Kodi koose jamu Ghantasala, P. Susheela
1968 Telugu thalli prema komma meedhi koyilamma P. Susheela
1968 Telugu bangaru pichuka krishna alakinchu P. Susheela
1968 Telugu vichitra sagotharagalu (D) Kunguma pottin in telugu P. Susheela, ?
1968 Telugu undamma bottu pedatha P. Susheela
1968 Telugu thalli prema letha letha P.B. Srinivas, P. Susheela
1968 Telugu niluvu dopidi lokam idhi lokam P. Susheela
1968 Telugu bangaru picchika manase gani karagani P. Susheela
1968 Telugu adrushtavanthulu Mokkajonna thotalo P. Susheela
1968 Telugu adrushtavanthulu Muddante chedha Ghantasala, P. Susheela
1968 Telugu dopidi dongalu (D) mutchaladi aadi momu P. Susheela, ?
1968 Telugu adrushtavanthulu Naa manase godari Ghantasala, P. Susheela
1968 Telugu dopidi dongalu (D) naa yavvanam eenade P. Susheela
1968 Telugu lakshmi nivasam navvu navvinchu P. Susheela
1968 Telugu vichitra sagotharagalu (D) Neeye than enakku in telugu P. Susheela, ?
1968 Telugu thalli prema ninna munna P.B. Srinivas, P. Susheela
1968 Telugu lakshmi nivasan oho oorinche P. Susheela
1968 Telugu adrushtavanthulu padina mudhra P. Susheela
1968 Telugu undamma bottu pedatha Patala gangamma Ghantasala, P. Susheela
1968 Telugu vichitra sagotharagalu (D) pattu mugathu chutti in telugu P. Susheela, ?
1968 Telugu bangaru pichuka po po nidurapo P. Susheela
1968 Telugu undamma bottu pedatha Raavama Mahalakshmi S.P. Balasubrahmanyam, P. Susheela
1968 Telugu undamma bottu pedatha Sandhya gali theli murali P. Susheela
1968 Telugu undamma bottu pedatha Srisailam mallana Ghantasala, P. Susheela
1968 Telugu dopidi dongalu (D) taluku belukula muripem P. Susheela, ?
1968 Telugu prana mithrulu thalapu theru thalapu P. Susheela. GS. JVR
1968 Telugu mangalya vijayam (D) ullam oru koyil in telugu P. Susheela
1969 Tamil manaivi anniyaval thagathukku P. Susheela, L.R. Eashwari
1969 Tamil adimai penn ayiram nilave vA S.P. Balasubrahmanyam, P. Susheela
1969 Tamil adimai penn kaalathai ventravan nee P. Susheela, S. Janaki
1969 Tamil thunaivan marudha malai meedhilE TMS, P. Susheela
1969 Tamil thunaivan naan yaar enbadhai nE solla TMS, P. Susheela
1969 Tamil manaivi Osaiyillaamal mozhi  TMS, P. Susheela
1969 Tamil kulavilakku panai maram thennai maram vazhai P. Susheela
1969 Tamil thunaivan parvadha raja kumaranin magane TMS, P. Susheela
1969 Tamil manaivi pennin perumaye perumai P. Susheela
1969 Tamil kulavilakku poo poova poothirukku bhoomiyle P. Susheela
1969 Tamil kulavilakku P. Susheela
1969 Tamil subha dinam putham puthu mEni BalaMuraliKrishna, P. Susheela
1969 Tamil manaivi TMS, P. Susheela
1969 Tamil thunaivan velodu vilayaadum P. Susheela
1969 Tamil subha dinam verenna vendum unnaithavira TMS, A.L. Raghavan, P. Susheela
1969 Telugu sivabhaktha vijayam (D) aadi sivuni nadamuni P. Susheela, ?
1969 Telugu kondaveeti simham(D) amma anaga velpu P. Susheela
1969 Telugu muhoortha balam ammalaganna ammallara P. Susheela
1969 Telugu eka veera  avuna cheliya sari P. Susheela
1969 Telugu eka veera bhama kalabam P. Susheela. ?
1969 Telugu manushulu maaraali bhoomata eenadu P. Susheela
1969 Telugu muhoortha balam bugga gillagane S.P. Balasubrahmanyam, P. Susheela
1969 Telugu akka chellelu -new chekachekalade P. Susheela
1969 Telugu akka chellelu -new Chita pata chinnukulatho kurisindhi Ghantasala, P. Susheela
1969 Telugu muhoortha balam doy doy vasthunnaadoy P. Susheela
1969 Telugu eka veera edhuru choosina valapu P. Susheela
1969 Telugu bhale rangadu emito idi emito Ghantasala, P. Susheela
1969 Telugu eka veera entha dhooramo adhi Ghantasala, P. Susheela, S.P. Balasubrahmanyam
1969 Telugu eka veera(old) entha haayi ee reyi Ghantasala, P. Susheela
1969 Telugu buddhimanthudu Guttameedha guvva kusindhi Ghantasala, P. Susheela
1969 Telugu kondaveeti simham(D) hayiga velagavayya P. Susheela, S. Janaki
1969 Telugu adarsha kutumbam hello saaru oh dora gaaru Ghantasala, P. Susheela
1969 Telugu bhale rangadu Hip hip hurray oho bhale Ghantasala, P. Susheela
1969 Telugu manushulu maaraali holiday holiday P. Susheela
1969 Telugu muhoortha balam kaay kaay kaavali P. susheela
1969 Telugu eka veera kanipetta geleva P. Susheela
1969 Telugu eka veera krishna nee peru P. Susheela
1969 Telugu manushulu maaraali maapaayi navvali P. Susheela
1969 Telugu muhoortha balam matthulo gammatthule P. susheela
1969 Telugu bhale rangadu merisipoye yennelaaye P. Susheela
1969 Telugu anna dammulu nannu choosi vennela P. Susheela
1969 Telugu anna dammulu navve o chilakamma P. Susheela, Ghantasala
1969 Telugu eka veera navvula adhi P. Susheela
1969 Telugu raagagaal nee dhega P. Susheela
1969 Telugu muhoortha balam neeku endaa manasunho P. Susheela
1969 Telugu akka chellelu -new o pilla fata fata P. Susheela
1969 Telugu eka veera oka deepam velagindhi Ghantasala, P. Susheela
1969 Telugu akka chellelu -new Paandavulu paandavulu thummedha P. Susheela
1969 Telugu sivabhaktha vijayam (D) pallavi paadenule P. Susheela
1969 Telugu bhale rangadu Palukaleni mounageethi Ghantasala, P. Susheela
1969 Telugu kondaveeti simham(D) ragamu nilicheva P. Susheela
1969 Telugu akka chellelu -new santhosham chesukunda P. Susheela
1969 Telugu anna dammulu siggesthundoi cheppa P. Susheela
1969 Telugu akka chellelu -new Srimati yemanna srivaru Ghantasala, P. Susheela
1969 Telugu manushulu maaraali thooruppu mandhaarapu P. Susheela
1969 Telugu buddhimanthudu thotaloki raaku raa P. Susheela
1969 Telugu eka veera thottalo naa raju Ghantasala, P. Susheela
1969 Telugu anna dammulu yenduku yenduku ee P. Susheela, Ghnatasala

( தொடரும் ... )
Part -1) (Part-2 ) (Part-3) ( Part-5) (Part-6) (Part -7)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக