பின்பற்றுபவர்கள்

திங்கள், 3 ஜூலை, 2017

பி.சுசீலாவின் குரலில் ஒலித்த வைரமுத்துவின் பாடல்கள் - பாகம் 2


    ஒரு பாடல் .. அந்த படத்தில் பி.சுசீலா பாடவில்லை.. வேறு எந்த வகையிலும் சம்பந்தப்படவும் இல்லை . திடீரென ஒரு இனிய சாரல் போல்  சுசீலா ரசிகர்களின் மனதை குளிவிர்த்தது அந்த வரிகள், "சுகமான குரல் யார் என்றால் சுசீலாவின் குரல் என்பேன்" . அதுவும் பெரிய மாஸ் அப்பீல் இருக்கும்  நடிகர் விஜய் அவர்கள் அந்த வரிகளுக்கு  வாய் அசைத்து பாடியதால் அந்த பாடலுக்கு பெரிய ரீச் கிடைத்தது. அந்த பாடலுக்கு சொந்தக்காரர் வைரமுத்து அவர்கள்.  தனது  அபிமான பாடகிக்கு அவர் அவ்வப்போது செய்யும் மரியாதைகளில் இதுவும் ஓன்று..


        என்னிடம் இருக்கும் லிஸ்டில் இந்த கூட்டணியில் இடம் பெற்ற 70 பாடல்களுக்கு மேல்  இடம் பிடித்து இருக்கின்றன. ஒரு சில தவறுகளும் இருக்கலாம். சில பாடல்கள் விடுபட்டு போயிருக்கலாம். எனினும்   சில முக்கியமான பாடல்களை குறிப்பிடுகிறேன்..
    


        கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வி.எஸ்.நரசிம்மன் இசை அமைப்பாளராக அறிமுகமாகிய "அச்சமில்லை அச்சமில்லை" படத்தில் "மேகத்தை தூது விட்டா தெச மாறி போகுமோன்னு தாகமுள்ள மச்சானே தண்ணிய நான் தூது விட்டேன்" என்ற கிராமிய பாடலை பல்லவி ஆக்கினார் வைரமுத்து அவர்கள். அந்த கால கட்டத்தில் இதுவும் ஒரு ஹிட் பாடலே..
மலைத்தோட்டத்து குயிலு இது உமக்காக பாடுதுங்க
ஆசையை நான் தூது விட அருவி ஒரு பாலமுங்க..

    அச்சமில்லை அச்சமில்லை படத்தில் இடம் பெற்ற "ஆவாரம் பூவு ஆறேழு நாளா நான் போகும் பாதையில் காத்திருக்கு"  பாடலும் வைரமுத்துவின் வரிகளில் வெளிவந்த அருமையான ஜோடிப்பாடல்.

"உன் கண்ணு ரெண்டும் துடிக்குதடி
கல்யாண மேளம் அடிக்குதடி
ஆசையை நெஞ்சில் சுமந்தபடி
அண்ணாந்து பார்க்கும் இளையகொடி 
உறங்காம தான் உன்ன பாத்தேன்
உனக்காக தான் கன்னி காத்தேன்
உன் மடியா நெனச்சு தல சாச்சேன்." 

       Odugira thanniyila


Aavaram poovu 



  இங்கேயும் ஒரு கங்கை படத்தில் இடம் பெற்ற "சோலை புஷ்பங்களே" பாடல் மிகவும் பிரபலமான பாடல்களில் ஓன்று. கிராமிய பாடல் என்றாலும் வைரமுத்துவின் தனித்துவம் அந்த பாடல் வரிகளில் தெரிந்து விடும் ..

"கண்ணா ஜோடிக் குயில் மாலையிடுமா
இல்லை ஓடி விடுமா ?
கண்ணே நானிருக்க சோகம் என்னம்மா
கங்கை வற்றி விடுமா ?
உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
கல்யாணமாம் கச்சேரியாம் தாளாதடி நெஞ்சு 
கொக்கு ஒண்ணு காத்திருக்குது
கண்ணீரில் தத்தளிச்சு மீனிருக்குது "





       நட்பு படத்திலும் "ஆச வச்சேன் உன் மேல மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே" என்ற சோகப்பாடலிலும் வரிகள் பிரமாதமாய் இருக்கும்.  

"தென்னந்தோப்பில்  என்ன பாத்து சொன்ன வார்த்தை என்னாச்சு ?
அப்பன் பேசும் பேச்சக்கேட்டு காது ரெண்டும் புண்ணாச்சு.
ரெக்கை எல்லாம் வெட்டிப்புட்டு நிக்குதைய்யா பச்சைக்கிளி  
ஊருக்குள்ள உன் நெனப்பில் வாடுதையா வஞ்சிக்கொடி"

         நட்பு படத்தில் இடம் பெற்ற "உன்னைக்காண துடித்தேன்" என்ற பாடல் ஜெயச்சந்திரன், பி,சுசீலா பாடிய இனிமையான பாடல்களில் ஓன்று.
      Aasa Vachen un mela


Unnai Kaana Thudithen



முடிவல்ல ஆரம்பம் படத்தில் இடம் பெற்ற "தென்னங்கீத்தும்  தென்றல் காற்றும் கை குலுக்கும் காலமடி" என்ற கிராமிய பாடல் குறிப்பிடத்தக்க  பாடல்..

    அம்பிகா கதாநாயகியாக நடித்த  "தங்கமடி தங்கம்" படத்தில் "அத்தமக தங்கத்துக்கு என்ன மயக்கம்" என்ற பாடலும் குறிப்பிட தக்க பாடல்..

       Thennankeetrum Thendral Kaatrum


Athamaga Thangathukku


      இயற்கையின் அழகை வர்ணிக்கும் இரு பாடல்கள் ஒரே காலகட்டத்தில் பி.சுசீலாவின்  குரலில் வைரமுத்துவின் வரிகளில்
ஒலித்தது. உயர்ந்த உள்ளம் படத்தில் "அம்பிகா பாடுவது போல் அமைந்த "காலைத்தென்றல் பாடி  வரும் ராகம் ஒரு ராகம்" பாடல் அருமையான வரிகளுக்காகவும் இனிய குரலுக்காகவும் பாராட்ட பட வேண்டிய பாடல். இப்பாடலின் ஒலிப்பதிவு முடிந்த பின் "ஜெமினி சினிமா" என்ற பத்திரிக்கையில் வைரமுத்து இப்படி எழுதினார், "பி.சுசீலா என்னும் தாய் வீணையில்  இருந்து தவழ்ந்து வந்த பாட்டு".  என்ன ஒரு கற்பனை !! அபாரம்.. 

"குயில்கள் மரக்கிளையில் சுரங்கள் சேர்க்கும்
மலர்கள் பனித்துளியில் முகங்கள் பார்க்கும்
தினந்தோறும் புதுக் கோலம் எழுதும் வானம்
இரவிலே நட்சத்திரம் இருந்ததே எங்கே - பனி

துளிகளாய் புல்வெளியில் விழுந்ததோ இங்கே
இந்த இன்பம் இதம் பதம்
இது ஒன்றே ஜீவிதம் "



  அதைப்போலவே வி.எஸ்.நரசிம்மன் இசை அமைத்த "ஆயிரம் பூக்கள் மலரட்டும்" பாடலிலும் வைரமுத்து அவர்கள்  இயற்கையின் அழகை வார்த்தைகளால் விவரிக்கும் அழகே அழகு. 

ஓடை  பாடும் ராகம் என்ன 
வாடை காற்றே சொன்னால் என்ன
வானம் தேடி போகும் மேகம் 
வாசல் தேடி வந்தால் என்ன 
பொன் அரும்புகள் எல்லாம் பூவானது இன்று 
ஆளானது கண்டு வந்து கூப்பிடும் வண்டு 
பூக்கள் எல்லாம் தேனூற்றும் 
போதை கொண்டு மனமோ தள்ளாடும் இன்று .."

       Thennankeetrum Thendral Kaatrum
       

ஆயிரம் பூக்கள் 


    ஒரு பாடகி தனது தொலைந்த காதலனை ஒரு மேடை நிகழ்ச்சியில் பார்க்கிறாள். பல கால பிரிவையும் தன் நிலையையும் பாடலிலேயே சொல்ல வேண்டிய சூழ்நிலையை வைரமுத்து வரிகள் ஆக்கினார்..  "ராகங்கள் என் ஜீவிதங்கள் என் கண்ணிலே காவியங்கள்" . 

"நீ பார்த்தது பெண்மையின் பாதியை
நேரிலே சொல்கிறேன் உண்மையின் மீதியை 
யார் ஆற்றுவார் காதலின் காயத்தை 
யாரிங்கே மாற்றுவார் காலத்தின் கோலத்தை 
காதலன் கண்களில் இன்று எனையே நான் கண்டேன் 
சுகம் கொண்டேன்" 

    கணவனால் கொடுமைக்குள்ளாகும் பெண்களின் நிலையை வைத்து "கல்யாண அகதிகள்" என்ற ஒரு படம் எடுத்தார் பாலச்சந்தர். வைரமுத்து எழுதிய "கானல் அலைகளிலே போகும் படகுகளே" பாடலும் ஒரு மேடைப்பாடலே.. 


       மனசுக்குள் உட்கார்ந்து
     
    ராகங்கள் என் ஜீவிதங்கள் 

கானல் அலைகளிலே 



 ..
   பி.சுசீலா இன்றளவும் மேடைகளில் பாடும் பாடல்களில் ஓன்று "வரம் தந்த சாமிக்கு பதமான லாலி". இப்பாடலி எழுதியவரும் வைரமுத்து அவர்களே..

"ஆனந்தக் கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே
ஶ்ரீராமன் பாட வந்த கம்பநாடன் நானே
ராமராஜனுக்கு வால்மீகி நானே
ஆகாயவண்ணனுக்கு தியாகையர் நானே"

மருதாணி என்ற படத்தில் சுலக்ஷ்னா பாடுவது போல் அமைந்த "தொட்டில் கிளி தூங்கடி சின்ன பூங்கொடி உறவே ஆராரோ" என்ற தாலாட்டு பாடலும் சிறந்த பாடலே.. அதிகம் கவனிக்கப்படாமல் போன பாடல்களில் இதுவும் ஓன்று.. 
      Varam Thantha Samikku
       

Thottil Kili Thoongadi




   "ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா" படத்தில் இடம் பெற்ற "அழுகின்றோம் பாபா" என்ற பாடலும் குறிப்பிட தக்க பாடல்.. 
     "பட்டிக்காட்டு தம்பி" படத்தில் பெற்ற "பிள்ளை தூங்க தாலாட்டு. அன்னை தூங்க யார் பாட்டு" என்ற சோகப்பாடலும் குறிப்பிட படத்தக்க பாடலே..

"காதல் கொள்ள மன்னனும் இல்லை கண்கள் தூங்குமா?
காவல் கொள்ள அண்ணனும் இல்லை அமைதி தோன்றுமா
உதிர்ந்து போன உறவுகள் இங்கே ஓன்று கூடுமா 
உடைந்து போன மண்குடம் மீண்டும் ஓன்று சேருமா
கரைகள் இரண்டும் இல்லாமல் நதியும் நகருமா
கல்லான தெய்வங்கள் பதிலை சொல்லுமா?"


       Azhugintrom Baba


    

Pillai Thoonga thaalattu




       கடைக்கண் பார்வை படத்தில் "ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம்" என்ற உணர்ச்சிபூர்வமான பாடல் இடம் பெற்றது. கஷ்டமான பாடல் என்றாலும் மக்களை சென்றடையவில்லை..

"உன்னை எண்ணி பாடும் போது 
நெருப்பை சூடும் என் பெருமூச்சு 
கண்ணா உன்னை கண்ணால் கண்டேன் 
சருகோ மீண்டும் தளிர ஆச்சு
இதயம் எங்கும் இன்பம் கொள்ளை 
இனி என் வாழ்வில் இரவே இல்லை 
சிறையை  உடைத்தேன் 
என் வாழ்வில் சோகம் ஏது ?"


இதய தாமரை படத்தில் "உன்னை ஏன் சந்தித்தேன் ஊமை நான் சிந்தித்தேன்" என்ற சோகப்பாடலும் அருமையாக இருக்கும்.. அதுவும் பிரபலம் ஆகாமல் போனது..

தெய்வங்கள் பார்க்காதது என் துன்பம் சீதாவும் காணாதது
என் ராமன் யார் என்றுதான் இப்போது என் ஜீவன் மன்றாடுது
இல்லாத தாலி உண்டானது
இப்போது தாலி இரண்டானது
என் வாழ்க்கை தள்ளாடுது
பின்னென்ன என் சேலை முள்ளானது
       உன்னை ஏன் சந்தித்தேன்
       

எதோ ஒரு ராகம் 


நியாயத்தராசு திரைப்படம் மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற "பஞ்சாக்னி" என்ற திரைப்படத்தின் தமிழ் வடிவம் ஆகும். கலைஞர் வசனம் எழுத, வைரமுத்துவின் பாடல்களுக்கு சங்கர் கணேஷ் இசை அமைத்தார். தமிழில் படம் வெற்றி பெறாததால் பாடல்களும் கவனிக்கபடாமல் போயிற்று.. இரு அருமையான பாடல்களை பி.சுசீலா அந்த படத்தில் பாடி இருந்தார்...

      தொடுவானம்



யாருக்கு ஆறுதல் யாரோ



வைரமுத்து அவர்கள் அடுத்த தலைமுறை இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் கைகோர்த்து பல வெற்றிப்பாடல்களை அளித்தார், அதில் இரு பாடல்களை பி.சுசீலாவும் பாடினார்..
பி.சுசீலாவின் அடுத்த தலைமுறைக்கும் எடுத்து சென்ற பாடல்களில் ஓன்று "கண்ணுக்கு மை அழகு". பாடலும், வரிகளும், குரலும் அழகோ அழகு..

மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளி அழகு
அலை மீண்டு போனாலும் கரை கொண்ட நுரை அழகு
இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடு தான் அழகு
இளமாறன் கண்ணுக்கு எப்போதும் நான் அழகு

   பாலச்சந்தர் டைரக்ட் செய்த டூயட் படத்தில் இடம் பெற்ற   "மெட்டுப்போடு மெட்டுப்போடு" பாடலிலும் பி.சுசீலாவின்
குரல் இடம் பெற்றது.

   2007-இல் அடுத்த தலைமுறை இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையிலும் வைரமுத்துவின் வரிகளை .சுசீலா பாடினார்." பொட்டு வைத்த முகத்தை தொட்டு வைத்த தலைவா" என்ற பாடலில் சுசீலாவின் இளம் நடிகை நவ்யா நாயருக்கும் பொருந்தியது. 

       Kannukku Mai Azhagu

Pottu Vaitha Mugathai


எத்தனை அருமையான பாடல்கள்..!!! அருமையான வரிகளும், இனிமையான குரலும், தெளிவான உச்சரிப்பும் சேர்ந்து எத்தனை உயிரோட்டமான பாடல்களை நமக்கு அளித்திருக்கின்றன !!

NoYearMovieSongsMusic
11980oonjalpoomaalaishyam
21981panjamiudhaya kaalame nanaintha Ilayaraja
31981Sivappu malliavan thodatha pookkalShankar Ganesh
41981sivappu mallioorukkulle-dramaShankar Ganesh
51981sivappu mallirendu kannam chandana Shankar Ganesh
61981Sivappu mallirendukannam-sadShankar Ganesh
71981thanneer thanneerkannana poo maganeM.S. Viswanathan
81982ammaammave deivamShankar Ganesh
91982ammapoo mugam sivakkaShankar Ganesh
101982kaatrukkenna velikalyana medai kandaShivaji Raja
111982magane maganemagane ilam maganeIlayaraja
121982ninaivellam nithyakanni ponnu kaimele Ilayaraja
131983ilamai kalangalPaada vanthatho gaanamIlayaraja
141983saatchithenna marathula Shankar Ganesh
151984achamillai achamillaiaavaram poovu arezhu naalaV.S. Narasimman
161984achamillai achamillaiodugira thanniyile (megatha)V.S. Narasimman
171984anbulla malarekaadhal dehangalIlayaraja
181984enakkul oruvanthEr kondu sentavanIlayaraja
191984ingeyum oru gangaisolai pushpangaleIlayaraja
201984mudivalla arambamthennankeetrum thendral Ilayaraja
211984ninaivugal maraivathillaimalara thudikkum[1]M.S.V Raja
221984pudhiya sangamampanja swarangaleShivaji Raja
231984thangamadi thangamatha maga thangathukkuilayaraja
241984thangamadi thangamkaalam ilamai kaalamilayaraja
251984thiruppamraagangal en jeevithangalM.S. Viswanathan
261985ilam kantruparisam pOdaathaV.S. Narasimman
271985kalyaana agathigalKalyana agathigal naangalV.S. Narasimman
281985kalyaana agathigalmanasukkul udkaarnthu maniV.S. Narasimman
291985kalyaana agathigalvara vendum penne vara vendumV.S. Narasimman
301985kalyaana agathigalkaanal alaigalileV.S. Narasimman
311985maruthaanimachanukku machamirukkuGangai Amaran
321985maruthaanithottil kili thoongadi Gangai Amaran
331985oonjalaadum uravugalveenai enadhu kuzhanthaichakravarthy
341985oonjaladum uravugalpoonkodiye kai veesuchakravarthy
351985oru malarin payanamNeeya ennai paarthavanChandrabose
361985sippikkul muthuvaram thantha samikkuIlayaraja
371985uyarntha ullamkaalai thendralIlayaraja
381985yuddhamkanne vaanam un veeduV.S.Narasimman
391986aayiram pookal malarattumAyiram pookal malarattumV.S. Narasimman
401986kadaikan parvaietho oru raagam enoShivaji Raja
411986kadaikan parvaietho oru raagam -happyShivaji Raja
421986mounam kalaigirathukannan yaarukku sondhamShankar Ganesh
431986natpuaasa vaichen ummale machanIlayaraja
441986natpuunnai kaana thudithenIlayaraja
451986raaga devathaien kaatreK.V. Mahadevan
461986raaga devathaierithaalumK.V. Mahadevan
471986raaga devathaikanni pennin oomai K.V. Mahadevan
481986raaga devathaipaattellamK.V. Mahadevan
491986samsaram athu minsaramazhagiya anni anubhavamShankar Ganesh
501986shri shirdi saibabaazhugintrom saibabaIlayaraja
511986thaaikku oru thaalattualayinil mithanthathoru padaginilIlayaraja
521986thaaikku oru thaalattuilamai kaalam inge entru Ilayaraja
531987irumbu manidhaniravu nerathuChakravarthy
541987irumbu manidhanoor enna-ver2chakravarthy
551987irumbu manidhanyaar seithaChakravarthy
561987jai vedhalamdeham intru[2]Chakravarthy
571988adimai vilanguaanaikkum oruSampath Selvam
581988kalyaana paravaigalnalla kaalam porakkattume[3]Rajan Nagendra
591988pattikkattu thambipillai thoonga thaalaaTuChandrabose
601988super boy 3Dunnai thedi thendral M.S. Viswanathan
611989nyaya tharasuThoduvaanam rombaShankar Ganesh
621989nyaya tharasuyaarukku aaruthalShankar Ganesh
631990idhaya thaamraiunnai yEn sandithEn oomai Shankar Ganesh
641990nila pennepudhu uravu pudhu varavuvidyasagar
651991ullam oru oonjalsilaye thanga silayeJ.M. Raju
661991ullam oru oonjalyaar vitta pattamJ.M. Raju
671993pudhiya mugamkannukku mai azhaguA.R. Rahman
681994duetMettu podu mettu poduA.R. Rahman
691996paadum paadal unakkagavaa vaa vennila-sadmaharaja
701999paartha paarvayiloor uranga nee uranga ( ? )M.A. Inievan
712007sila nerangalilpottu vaitha mugathathiSrikanth Deva


 ( பாகம் -1 )

நன்றி !







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக